புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நேற்று இரவு லட்சக்கணக்கான பிரியாணி ஆர்டர்களை டெலிவரி செய்ததாக ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது. நாடு முழுவதும் நேற்று இரவு 10:25 மணிக்குள் 3.50 லட்சம் பிரியாணி மற்றும் 61,000 பீட்சாக்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் 3.50 லட்சம் பிரியாணி ஆர்டர்களில் 75.4 சதவீதம் ஹைதராபாத் பிரியாணி, 14.2 சதவீதம் லக்னோ பிரியாணி, 10.4சதவீதம் கொல்கத்தா பிரியாணி என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் 61,287 டோமினோஸ் பீட்சாக்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இரவு 9.18 மணிக்குள் 12,344 பேர் கிச்சடியை ஆர்டர் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஸ்விக்கி இன்ஸ்டா மார்ட் மூலமாக பல 1.76 லட்சம் சிப்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் 2,757 ஆணுறைகள் டெலிவரி செய்யப்பட்டதாகவும் ஸ்விக்கி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.