“புது நாடாளுமன்ற கட்டிடம்”…. அவங்க தான் திறந்து வைக்கணும்?…. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்….!!!!

பிரதமர் மோடி தன் கனவு திட்டமான நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வருகிற மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. தில்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு இருக்கும் புது கட்டிடமானது மேம்பட்ட முறையில் கட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புது நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக பல எதிர்கட்சிகள் அறிவித்துள்ளது.

இந்த போராட்டத்துக்கு மத்தியில் பிரதமர் மோடிக்கு பதில் புது நாடாளுமன்ற கட்டிடத்தை இந்திய குடியரசு தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் நேற்று தாக்கல் செய்த இந்த மனு, இன்று விசாரணைக்காக விடுமுறை பெஞ்ச் முன் குறிப்பிடப்படும்.