புதுவை சபாநாயகராக சிவகொழுந்து போட்டியின்றி தேர்வு….!!

புதுவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் சிவகொழுந்து போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

நடைபெற்ற மக்களவை தேர்தலில் புதுவை மக்களவை தொகுதியில் புதுவையில் சட்டப்பேரவை  சபாநாயகராக பதவி வகித்த வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது சபாநாயகர்  பதவியை போட்டியிடும் போதே ராஜினாமா செய்தார். இந்நிலையில் நடைபெற்ற இருக்கு பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடரை கருத்தில் கொண்டு புதிய சபாநாயகர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றது. இதற்காக போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று 12 மணி வரை சட்டசபை செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று  அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரி சபாநாயகராக காங்கிரஸ் வேட்பாளர் சிவகொழுந்து போட்டியின்றி தேர்வு

உரிய கால அவகாசம் இல்லாமல் சபாநாயகர் தேர்தலை எப்படி நடத்தலாம் என்று இந்த தேர்தலை எதிர்கட்சிகளான  என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகியவை புறக்கணித்தனர். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சிகள் யாரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாததால் காங்கிரஸ் கட்சியின்  வேட்பாளர் சிவகொழுந்து போட்டியின்றி சபாநாயகராக தேர்வானார்.