இந்திய ரயில்வே துறை வருவாய் பெருக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரயில்வே நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு பிளாட்பாரம் கட்டணம், ரயில் பெட்டிகளில் விளம்பரம் செய்ய அனுமதிப்பது, வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது என பல வழிகளில் வருமானத்தை பெருக்கி வருகிறது. மேலும் உள்ளூர் உற்பத்தியை பெருக்கும் விதமாகவும் ஒரு நிலையம் ஒரு பொருள் என்ற திட்டமும் பல்வேறு ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வருமானத்தை கூட்டும் விதமாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மதுரை ரயில் நிலையத்தில் புதுமண தம்பதிகள் போட்டோ ஷூட் நடத்த வேண்டும் என்றால் 5000 ரூபாய் கட்டணம் செலுத்தி வெட்டிங் போட்டோஸ் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் போட்டோ ஷூட்க்கு ரயில் பெட்டிகளில் பின்புலம் வேண்டுமென்றால் கூடுதலாக 1500 ரூபாய் செலுத்தி அனுமதி பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.