புதுமண தம்பதிகளுக்கு இதெல்லாம் தேவையா?…. வைரல் புகைப்படம்….!!!

குரோஷியாவை சேர்ந்த Kristijan Ilicic மற்றும் அவர் மனைவி Andrea Trgovcevic ஆகியோருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் புதுமண தம்பதி Northwest Africa வில் உள்ள Mauritania ஹனிமூனுக்காக சென்றனர். தங்கள் தனிமையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆப்பிரிக்காவிலுள்ள சஹாரா பாலைவனத்தின் வழியாக 70 கிலோ மீட்டர் தூரம் 20 மணிநேரம் செல்லக்கூடிய ரயிலில் போட்டோஷூட் நடத்தினர். இந்த ரயிலில் 200 பெட்டிகள் உள்ளது. அத்தனை பெட்டிகளிலும் இரும்புத்தாது தூதுகள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கும். பகலில் 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கும் அதிகமாகவும், இரவில் ஜீரோ டிகிரி வெப்ப நிலைக்கு கீழாக குறைந்து புழுதிகள் அடங்கிய கடுமையான பயணமாக இருக்கும். உலகில் ஆபத்தான ரயிலில் தான் அவர்கள் போட்டோ ஷூட் நடத்தி உள்ளனர். அதுவும் ஆபத்தான போஸ்கள் எல்லாம் கொடுத்து இந்த புகைப்படத்தை எடுத்து உள்ளனர்.

இதுகுறித்து Kristijan கூறியது, நாங்கள் ஏற்கனவே அருகில் உள்ள தாய்லாந்து, சீஷெல்ஸ், அருவா, குராக்கோ, பஹாமாஸ், செயின்ட் லூசியஸ், மொரிஷியஸ் உள்ளிட்ட 150 நாடுகளுக்கு மேல் சென்று அங்குள்ள அழகான கடற்கரையை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் Mauritania மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட சுற்றுலா தளமாக உள்ளது என்பதை அறிந்துள்ளோம். ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் 6000 பேருக்கு மேல் வருகை தராத இடமாக இது உள்ளது. இங்கு நாங்கள் சென்ற கிராமத்தில் இருந்த மக்கள் அவர்கள் பாரம்பரிய கலாச்சார முறைப்படி எங்களது திருமண நிகழ்ச்சி நடத்தி மகிழ வைத்தனர் வைத்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார் இவர்களின் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது. இதற்கு, வைரலாக வேண்டும் என்று இப்படி எல்லாமா கூட ரிஷ்க் எடுப்பார்கள் என்றும் இதெல்லாம் தேவையா என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *