புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். கருணாநிதியின் நம்பிக்கையை வென்ற இவர் முதல் முறையாக புதுச்சேரி வரலாற்றில் 1980 முதல் 83 வரையில் திமுக கட்சியின் முதல்வராக இருந்தார். அதன் பிறகு திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அப்போது 1990 முதல் 91 வரையில் முதல்வராக இருந்தார். அவர் உடல் நல குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார். அதன்படி புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் இறந்த செய்தியை கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன். திமுக சார்பில் முதலமைச்சராக இருந்தபோது புதுச்சேரியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தவர். அவருடைய மரணம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. மேலும் அவருடைய மறைவால் வாடும் புதுச்சேரி முதல்வரின் குடும்பத்தினர் மற்றும் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.