“புதுச்சேரி மது பிரியர்களே உஷார்”…. தீவிர ரோந்து பணியில் போலீசார்….!!!!!!

சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்களில் வீக் எண்ட் பார்ட்டி  என்ற பெயரில் இளைஞர்கள் பலரும் குவிகின்றன. இந்நிலையில் புதுச்சேரி வரும் நபர்கள் கடற்கரை ஆரோவில், சுண்ணாம்பாறு படகு குழாம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில் போன்ற இடங்களை சுற்றிப் பார்க்கின்றனர்.

அதற்கு அடுத்தபடியாக பலரது விருப்பமாக உள்ள புதுச்சேரி சாராயம், மதுபானங்கள் இருக்கின்றது. இவற்றை குடித்துவிட்டு பல பேரும் பொது இடங்களில் தகராறில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றது. இதனால் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் புதுச்சேரி பெரியகடை போலீசார் காந்தி வீதி தியாகு முதலியார் வீதி சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது ஒருவர் மது அருந்திவிட்டு போதையில் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது விசாரணையில் அவர் கோட்டகுப்பம் பர்கர் நகரை சேர்ந்த முகமது அலி என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல் ஊதியம் சாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் போலீசார் உப்பளம் சாலை துறைமுக வாயில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் மது குடித்துவிட்டு ரகளை செய்து கொண்டிருப்பதை பார்த்த போலீசார் உடனே அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் உப்பளம் ராசு உடையார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜோசப்(36), கண்டக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த வேலவன்(24), லாஸ்பேட்டை எழில் நகரைச் சேர்ந்த சதீஷ்(25) மற்றும் விழுப்புரம் அத்தியூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (31) என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *