புதுச்சேரியில் எஸ்மா சட்டம் அமல்படுத்த… மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆவணங்களை அனுப்பி வைத்த மாநில அரசு…!!!!!

தனியார்மயமாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை மின் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்துவது மிகவும் தவறு செயற்கையாக மின்தடை ஏற்படுத்தும் ஊழியர்கள் கடுமையாக பின்விளவை சந்திக்க நேரிடும். மேலும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற மின்துறை ஊழியர்கள் வேலைக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது எஸ்மாச்சட்டம் பாயும்.

அதனால் மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். மேலும் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு சார்பில் நடத்தப்பட்ட இரண்டு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் எஸ்மா சட்டத்தை அமல்படுத்த கோரி ஆளுநர் ஒப்புதல் உடன் மத்திய அரசுக்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.