புதுசா வீடு, மனை வாங்குற பிளான் இருக்கா?…. சென்னையில் பிப்ரவரி 17 முதல் 19 வரை…. ரெடியா இருங்க… !!!!

சென்னையில் நந்தம்பாக்கத்தில் வீடு, மனை வணிக கண்காட்சியை பிப்ரவரி 17ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்க வைக்க உள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகின்ற பிப்ரவரி 17 முதல் 19ஆம் தேதி வரை வீடு மற்றும் மனை வணிக 15 வது ஆண்டு ஃபேர்ப்ரோ 2023 நடைபெற உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட மனை வணிகம் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் தங்களின் பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துக்களை 20 லட்சம் முதல் 10 கோடி வரை காட்சிப்படுத்த உள்ளனர்.

இந்த கண்காட்சியில் சொத்துக்களை வாங்குபவர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படும். இந்த கண்காட்சிக்கு முன்பு பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை தியாகராய நகர் விஜயா மஹாலில் வீட்டு கடன் முகாம் நடைபெற உள்ளது. அங்கு வீடு வாங்குபவர்கள் தங்களின் வீட்டு கடனுக்கான முன் அனுமதியை வங்கிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.