புதுக்கோட்டை தொகுதி முன்னாள் எம்எல்ஏ முகமது கனி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 1984 முதல் 1989 வரை புதுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக பதவி வகித்த முகமது கனி, காங்கிரஸ் நகர் மன்ற தலைவராகவும் இருந்துள்ளார். முகமது கனி மறைவு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, அனைத்து தமிழக அரசியல் கட்சியினரிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்