புதிய நாடாளுமன்ற கட்டிடம்… பிரதமர் மோடி திறந்து வைக்க தடை இல்லை… மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்…!!!!!

டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் மத்திய அரசு சார்பாக பிரதமர் மோடி நாளை புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கிடையே கன்னியாகுமரியை சேர்ந்த வக்கீல் ஜெய் சுகின் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்காது அவரது மதிப்பை குறைப்பது மட்டுமில்லாமல் அரசமைப்பு சட்டத்தையும் மீறுவதாக  இருக்கிறது.

அதனால் புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி முர்முவை கொண்டு திறக்க மக்களவை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்த மனு நீதிபதி ஜேகே மகேஸ்வரி, பி எஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் ஆர்வம் கேட்ட வேண்டிய அவசியம் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு வக்கீல் ஜெய் சுகின் அரசமைப்பு சட்டம் 79வது பிரிவில் நாடாளுமன்றம் என்பது ஜனாதிபதியையும் இரு அவைகளையும் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது என பதில் அளித்துள்ளார். மேலும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கும் அரசமைப்பின் அரசமைப்பு சட்டத்தின் 79வது பிரிவுக்கும் என்ன தொடர்பு என நீதிபதிகள் மீண்டும் கேள்வி எழுப்பியதற்கு நாடாளுமன்றத்தின் தலைவராக உள்ள ஜனாதிபதி தான் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்க வேண்டும் என ஜெய் சுகின் வாதிட்டுள்ளார்.

அதற்கும் திறப்பு விழாவிற்கும் என்ன தொடர்பு என் நீதிபதிகள் கேட்டவுடன் ரிட் மனு தாக்கல் செய்ததற்கான காரணத்தை நாங்கள் அறிவோம். இதுபோன்ற மனுவை  விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் அபராதம் விதிக்கவில்லை என்ற நன்றியுடன் இருங்கள் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்ய முயற்சி செய்தபோது மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் கூறியுள்ளார். இந்நிலையில் மத்திய அரசின் சொலிசிட்டர் general துஷார் மேத்தா மனுதாரர் ஐகோர்ட் நாட வாய்ப்புள்ளது என்பதால் மனுவை திரும்ப பெற அனுமதிக்க கூடாது என வாதிட்டுள்ளார். இதனை அடுத்து ஐகோட்டை நாட மாட்டேன் என மனுதாரர் கூறியதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட் மனுவை திரும்ப அனுமதி அளித்து தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை  பிரதமர் மோடி திறக்க எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply