புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை… ஆய்வு செய்ய சிங்கிளா போன சிங்கம்…. பரபரப்பான டெல்லி..!!!

தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டும் பகுதியில் பிரதமர் மோடி தனியாக ஆய்வு மேற்கொண்டார்.

தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 8.45 மணி அளவில் பிரதமர் மோடி நாடாளுமன்றம் கட்டும் பகுதிக்கு தனியாக ஆய்வுகளை மேற்கொண்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நாடாளுமன்ற கட்டிடம் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் 64 ஆயிரத்து 500 சதுர கிலோமீட்டர் பரப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில் விசாலமான கார் பார்க்கிங், நூலகம், எம்பிக்களின் ஓய்வறை,  பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் முற்றிலும் டிஜிட்டல் மயமான பேப்பர் பயன்பாடற்ற வசதிகளை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்திற்கான பூமி பூஜை கடந்த பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் ஹர்தீப் எஸ். பூரி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நெருக்கடிக்கு மத்தியில் இந்த புதிய நாடாளுமன்றம் தேவையா என பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின .நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனால் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் மத்திய அரசு கட்டுமானப் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அடுத்த ஆண்டு பாதியில் கட்டுமான பணிகள் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *