“புதிய சாதனை படைத்த பொன்னியின் செல்வன்” முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா…..? வியப்பில் திரையுலகினர்….!!!

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதி கடந்த 1955-ம் ஆண்டு வெளியான புகழ்பெற்ற நாவல் பொன்னியின் செல்வன். இந்த நாவலை மணிரத்தினம் பிரம்மாண்ட படமாக 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ரகுமான், பிரகாஷ் ராஜ், திரிஷா, ஐஸ்வர்யா ராய், சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று ரிலீஸ் ஆகி பாசிட்டிவ்வான விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தப் படம் முன்பதிவிலேயே 17 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ள நிலையில், இந்தியாவில் இன்று மட்டும் 30 முதல் 35 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் உலகம் முழுவதும் சுமார் 1.3 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள்  குவிந்து வருவதால் வெளிநாட்டில் 20 கோடி வரை முதல் நாளில் வசூலாக வாய்ப்பிருப்பதாகவும் வர்த்தக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் முதல் நாளில் மட்டும் 60 கோடி வரை வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இனிவரும் நாட்களிலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் கூடுதலாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுவரை எந்த தமிழ் படமும் செய்யாத சாதனையை பொன்னியின் செல்வன் திரைப்படம் செய்துள்ளது.