புதிய கொரோனா வைரஸ்… தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை…!!!

இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த நபருக்கு புதிய கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றனர். இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா அச்சத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த அவருக்கு புதிய வைரஸ் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு 14 நாட்கள் தனிமை கட்டாயம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். கொரோனா அறிகுறி இருந்தால் பொதுமக்கள் உடனே அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். மேலும் புதிய வகை கொரோனாவால் மக்கள் பதட்டமடைய தேவையில்லை. முக்கியமாக பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலம் வரும் செய்திகளை நம்பவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.