புதிய கொரோனா பரவல்…. இந்த இரு நாட்டினருக்கு தடை…. ஜெர்மனி அறிவிப்பு…!!

பிரிட்டன் மற்றும் தென்னாபிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்துள்ளதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.  

ஜெர்மனி, வரும் 2021 ஜனவரி 6-ஆம் தேதி வரையில் பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் மக்களுக்கு தடையை நீடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த இரு நாடுகளிலும் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு தோன்றியதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறபட்டுள்ளது. மேலும் ஜெர்மனி சுகாதார அமைச்சகம் கூறியுள்ளதாவது, இந்த இரண்டு நாடுகளில் இருந்தும் வரும் ரயில், பேருந்து, கப்பல் மற்றும் விமானங்கள் மூலமாக வரும் பயணிகளின் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தடை 2020 இல் டிசம்பர் 22ம் தேதி முதல் 2021 ஜனவரி 6-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் செல்லுபடியாகக்கூடிய குடியிருப்பின் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜெர்மனிக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவித்துள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் கடந்த பத்து நாட்களுக்குள் இந்த நாடுகளுக்கு பயணம் செய்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.