ரஷ்யா அதிபர் புதின் தனது நெருங்கிய நண்பர்களாலேயே கொல்லப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆவேசமாக தெரிவித்துள்ளார். ஓராண்டை கடந்தும் உக்கரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்றும் நீடித்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள், வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
உக்கரைன் தனது அழகை இழந்து உருக்குலைந்த நிலையில் உக்ரைனுக்கு உலக நாடுகள் பல உதவிக்கரம் நீட்டி வருகின்றது. இதனிடையே ரஷ்ய அதிபர் புதின் தனது நெருங்கிய நண்பர்களாலேயே கொல்லப்படுவார் என உக்கரைன் அதிபர் ஆவேசமாக தெரிவித்தார். ரஷ்ய அதிபருக்கும் பலவீனம் ஏற்படும் காலம் வரும் எனவும் அதிபர் புதினுக்கு எதிராக அவருக்கு நம்பிக்கைக்குரிய நண்பர்களே செயல்படுவார்கள் எனவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.