டெல்லியை மிரட்டி வந்த பிரபல சீரியல் கில்லர் சந்திரகாந்த்  ஜா என்ற 57 வயது நபரை கடந்த வெள்ளிக்கிழமை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் புட்சர் ஆஃப் டெல்லி என்று அழைக்கப்படுகிறார். இவரை ஓடும் ரயிலில் வைத்து காவல்துறையினர் கைது செய்த நிலையில் இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் டெல்லியில் வசித்து வந்த நிலையில் இதுவரை 18 கொலைகளை செய்துள்ளார். இவர் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்களுடன் பழகி பின்னர் அவர்களை நன்சாகூ என்ற ஆயுதத்தின் மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவார். தொடர்ந்து அவர்களுடைய உடலை துண்டு துண்டாக வேண்டி ஒரு பாக்கெட்டுகளில் போட்டு காவல்துறையை கிண்டல் அடிக்கும் விதமாக எழுதி திகார் சிறைக்கு வெளியே போட்டுவிட்டு சென்றுவிடுவார். இவர் முதல் முறையாக கடந்த 1998 ஆம் ஆண்டு ஔவுரங்கசீப் கொலை செய்தார். அதன் பிறகு தான் இவருடைய சீரியல் கொலைகள் தொடங்கப்பட்டது. இவர் கைது செய்யப்பட்டு ‌ சில மாதங்கள் சிறையில் இருந்த நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு மற்றும் 2007 ஆண்டுக்கு இடையில் அவருடைய கொலைகள் டெல்லியை நடுநடுங்க வைத்தது. இவர் செய்த 3 கொலைகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட 2016 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. இவர் கடந்து 2023 ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்த நிலையில் பின்னர் தலைமறைவானார். இவரைப் பிடித்துக் கொடுத்தால் 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித்திருந்த நிலையில் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதைத்தொடர்ந்து தான் கடந்த வெள்ளிக்கிழமை ஓடும் ரயிலில் வைத்து கைது செய்யப்பட்டார். மேலும் இவருடைய கதை நெட்பிளிக்ஸ் தளத்தில் புட்சர் ஆப் டெல்லி என்ற பெயரில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.