ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒலக்கடம் நாகிரெட்டிபாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை குணசேகரின் மகன்கள் வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்து புகை வருவதை பார்க்க சிறுவர்கள் தந்தையிடம் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் குணசேகரனின் குடிசை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகில் இருக்கும் பழனியம்மாள், பச்சமுத்து ஆகியோரது வீடுகளும் தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் மூன்று வீடுகளில் இருந்த பொருட்கள், துணிகள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.