நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த 2 பேர், கலர் புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் டெல்லி காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இச்சம்பவத்தால் பார்வையாளர் பாஸ் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புகை குண்டுகளுடன் எளிதாக செல்ல முடியும் என்றால் நாடாளுமன்றத்தில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் ஏன் நுழைய முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதுகுறித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி; “அவைக்குள் மிகவும் எளிதாக நுழைந்து தாக்குதலை நடத்த முடியும் என்பது கவலை அளிக்கிறது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட்டு. பாதுகாப்பில் கோட்டைவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்