“பீஸ்ட்- கேஜிஎப்-2 படங்கள்”…. இவ்வளவு திரையரங்குகள் ஒதுக்கீடு?…. லீக்கான தகவல்…..!!!!!

ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் அடிப்படையில் 2 மிகப்பெரிய திரைப்படங்கள் ஒன்றாக திரைக்கு வெளிவர இருக்கிறது. குறிப்பாக நடிகர் விஜய் நடித்து உள்ள பீஸ்ட் படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. அதேபோன்று யாஷ் நடித்துள்ள கேஜிஎப்-2 படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களுக்கான திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் பீஸ்ட் படத்திற்கு 800 முதல் 850 திரையரங்குகளும், ஏப்ரல் 14- ஆம் தேதி வெளியாகவுள்ள கேஜிஎப்-2  படத்திற்கு 200 முதல் 250 திரையரங்குகள் ஒதுக்கப்பட இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *