பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்புக்கு வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான பி எட் சிறப்பு கல்வி பட்ட படிப்புக்கான இணைய வழி விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க கையேடு பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படிப்புக்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் இதில் சேர விரும்புவோர் வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க கையேட்டை தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-24306617என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது