“பிஷப்களை தேர்வு செய்யும் குழு”… இனி பெண்களுக்கும் வாய்ப்புண்டு?…. வெளியான தகவல்….!!!!!

போப் பிரான்சிஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது “வாடிகன் நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கியமான பொறுப்புகளை அளிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அதாவது பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் இப்போது ஆண்கள் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்ட அவர், இக்குழுவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாக கூறினார். ஆகவே விரைவில் இந்த குழுவில் 2 பெண்கள் இடம்பெறுவார்கள் எனவும் இதன் வாயிலாக இப்பாதையில் வழிகள் கொஞ்சம் திறக்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் இதற்கான முடிவு இதுவரை அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார். வாடிகனின் நிர்வாகத்துறைகளில் பெண்களுக்கு முக்கியமான பங்கு அளிக்கப்பட்டு வருவதாகத் கூறிய போப் பிரான்சிஸ், வாடிகனின் நீதி மற்றும் அமைதிக்கான துறையின் 2 ஆம் நிலை தலைவராக சகோதரி அலீஸ்ஸாந்தரா ஸ்மெரில்லி சென்ற வருடம் தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வாடிகனில் சென்ற மாதம் நடைமுறைக்கு வந்த புது அரசியல் சாசனம் பற்றி விளக்கம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *