பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. தாளாளரை கைது செய்யும் வரை போராட்டம்….? பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் இ.பி காலணியில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தாளாளரான வினோத்(34) என்பவர் 12-ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இணைந்து வினோத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் பள்ளி வளாகத்திற்குள் செல்ல வைத்தனர். அப்போது வினோத் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என மாணவர்கள் கூறியதால் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பின்னர் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், ஆவடி தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மாலை 3 மணிக்கு வினோத் மீது வழக்கு பதிவு செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பிறகு அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வினோத் மீது வழக்குபதிந்து தலைமறைவாக இருக்கும் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர் .

Leave a Reply