பிளஸ்-2 ஆங்கில தேர்வில் முறைகேடு….. கையும் களவுமாக சிக்கிய மாணவர்கள்….!!!!

கடந்த 5-ம் தேதி முதல் பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் தமிழ் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவ மாணவிகள் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இன்று ஆங்கில தேர்வு நடைபெற்றது. இது சற்று எளிமையாக இருந்ததாகவும், குறைக்கப்பட பாடத்திட்டத்தின்  அடிப்படையிலே கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

காப்பி அடித்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிப்பதற்காக அரசு தேர்வுத்துறை சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் ஆங்கில தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட ஒரு மாணவரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு மாணவரும் ,காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாணவர் என்று மொத்தம் மூன்று மாணவர்கள் பிடிபட்டனர். இதனை அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமன் வர்மா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *