விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரவீனா. இவர் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது குவைத், துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று சுற்றி வருகிறார். குக் வித் கோமாளி சீசன் நான்கில் கோமாளியாகவும் கலக்கி வருகிறார். இந்த நிலையில் இவர் சமீப காலமாக டான்சர் மணியோடு ஸ்விஸ் மற்றும் துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு சுற்றி வருகிறார்.

மேலும் அவரோடு சேர்ந்து பல வீடியோக்களையும் செய்து இருவரும் இன்ஸ்டா பக்கங்களிலும் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரவீனா லவ் ஸ்டிக்கருடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு மணியும் அதே ஸ்டிக்கருடன் நன்றியை தெரிவித்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா? இது எப்போ வெளியே சொல்வீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இருவர் பக்கத்தில் இருந்தும் எந்த விதமான பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.