பிறந்தநாள் கொண்டாட சென்ற தம்பதிகள்…. சாலையில் சரிந்து விழுந்த மரம்…. ஐந்து குழந்தைகளை அனாதையாக்கிய கோர விபத்து….!!

அமெரிக்காவில் சாலையில் மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகள் ஜேகேவுட்ருப் (36 வயது) – ஜெசிக்கா (45 வயது). இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜெசிக்காவின் 45வது பிறந்தநாள் வந்துள்ளது. இந்த பிறந்தநாளை கலிஃபோர்னியா கடற்கரையில் வைத்து கொண்டாடுவதற்காக தம்பதிகள் இருவரும் அப்பகுதிக்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது திடீரென சாலையின் ஓரமாக இருந்த 175 அடி உயரமுடைய மரம் முறிந்து தம்பதியினர் சென்று கொண்டிருந்த காரின் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே காற்று வீசாத நிலையில் மரம் முறிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் இப்படி ஒரு கொடூர விபத்தை இதுவரை நான் பார்த்ததில்லை என்றும் கோன்சலஸ் எனும் காவல் அதிகாரி ஒருவர் கூறிய தகவல் கிடைத்துள்ளது.