பிரௌனி தொலைஞ்சுட்டு…. கண்டுப்பிடிச்சு தந்தால் சன்மானம்…. போஸ்டர் ஒட்டிய உரிமையாளர்….!!!!

நாய்களில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. சிலர் தங்களுக்கு பிடித்தமான நாய் வகைகளை தேர்ந்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அதோடு நாய்களுக்கு செல்ல பெயர்கள் வைத்து அழைப்பர். மேலும் செல்லப் பிராணியான நாயை குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக வளர்ப்பார்கள். தங்களது வீட்டில் குடும்ப உறுப்பினர் ஒருவர் காணவில்லை எனில் அவரது அங்க அடையாளங்களுடன் போஸ்டர் அடித்து விளம்பரப்படுத்தி அவரை கண்டுபிடிக்க முயற்சி எடுப்போம்.

பின் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு (அல்லது) தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிப்பதாக விளம்பரம் செய்வார்கள். அதேபோன்று மதுரை மாட்டுத்தாவணி லேக் பகுதியில் தன் வீட்டு செல்லப்பிராணி பிரௌனி (பெண் நாய்) காணவில்லை என அதன் அங்க அடையாளங்கள் மற்றும் நாயின் புகைப்படத்துடன் முழு விவரங்கள் அடங்கிய அச்சிடப்பட்ட போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போன அன்று பிரௌன் கலர் பெல்ட் அணிந்து இருந்தது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்புக்கு 2 தொலைபேசி எண்களும் இருந்தது. அதுமட்டுமின்றி போஸ்டரில் தங்களின் செல்லப் பிராணியை கண்டுபிடித்துத் தருபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.