உத்திரபிரதேசம் மாநிலம் மிர்சாப்பூரில் ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது பிரேத பரிசோதனை செய்யும் போது இறந்து விட்டதாக கருதப்பட்ட சிறுமி உயிரோடு எழுந்து அமர்ந்தார். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உத்திரபிரதேசம் மாநிலம் பெருசா போரில் கால்வாயில் தவறி விழுந்த சிறுமி உயிர் இழந்தார்.

தண்ணீரை விழுங்கிய சிறுமி இறந்து விட்டதாக அங்குள்ள அனைவரும் நினைத்ததை தொடர்ந்து சிறுமியை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பிரேத பரிசோதனைக்கான செயல்முறை தொடங்கியதும் சிறுமி சுயநினைவு அடைந்து எழுந்து அமர்ந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.