கடந்த அக்டோபர் மாதம்  2-ம் தேதி பிரேசிலில் அதிபர் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரியான ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும் இடையே பலபரீட்சை நடைபெற்றுள்ளது. இதில் ஜெயீர் போல்சனேரா அரசு கொரோனா தொற்றை கையாண்ட முறை மற்றும் அமேசான் மழை காடுகள் அழிப்பு போன்ற விவகாரங்களில் மக்களிடம் கடும் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களை எதிர்கொண்டதால் இந்த தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும் பிரேசில் தேர்தல் நடைமுறைப்படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும். இதனிடையே பிரேசில் தேர்தலில் பதிவாகியுள்ள ஓட்டுகள் எண்ணப்பட்டதில்  50.90 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் பிரேசில் அதிபராக வெற்றி பெற்று நேற்று லுலா டா சில்வா பதவியேற்றுள்ளார்.