பிரேசிலில் வேகமெடுக்கும் கொரோனா… 6 புதிய மந்திரிகள் நியமனம்… அதிபர் அதிரடி அறிவிப்பு…!!!

பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பால்3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில்அந்நாட்டு அதிபர் புதிய மந்திரிகளை நியமனம் செய்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி  வந்த நிலையில் தற்போது  தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது இந்தியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா  பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பிரேசில் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா  பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது .அதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதனால் அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அந்நாட்டில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் 1 கோடியே 20 லட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்நாட்டில் கடந்த ஆண்டு கொரோனாவைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை நான்காவது முறையாக சுகாதாரத்துறை மந்திரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அந் நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருந்து வந்த எர்னஸ்டோஅராஜீவோ என்பவர் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா உடனான உறவுகளை மோசமாக கையாண்டுஉள்ளார். அதனால் அந்நாடுகளில் இருந்து போதுமான அளவு கொரோனா தடுப்பூசிகளை பெற முடியாமல் போனது என்று கடுமையான விமர்சனங்கள் அவர் மீது எழுந்துள்ளது. அதனால் அவர் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் மந்திரிசபையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என கூட்டணிக் கட்சிகள் அதிபரை வலியுறுத்தியுள்ளன. இதனால் அந்நாட்டு அதிபர் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக வெளியுறவு, ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நீதி உள்பட முக்கியமான ஆறு துறைகளுக்கு புதிய மந்திரிகளை நியமித்து மிகப் பெரிய அளவில் தனது மந்திரி சபையை மாற்றி அமைத்துள்ளார்.