பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் பகுதியில் ரமேஷ்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பராசக்தி(26) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு பராசக்தி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ரமேஷ் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ரமேஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *