பிரிட்டன் பிரதமருக்கு…. வெற்றிகரமாக நடந்த சைனஸ் அறுவை சிகிச்சை…. நலமுடன் இருப்பதாக தகவல்….!!

பிரிட்டன் அதிபருக்கு வெற்றிகரமாக சைனஸ் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டின் பிரதமராக  போரிஸ் ஜான்சன் இருக்கிறார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இவருக்கு தற்போது சைனஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இவருக்கு அறுவை சிகிச்சை நடக்கும் சமயத்தில் அதிபரின் பணிகளை துணை பிரதமராக இருக்கும் டோமினிக் ராப் கவனித்துக் கொண்டார். மேலும் போரிஸ் ஜான்சன் காமன்வெல்த் மாநாட்டில்  நடப்பு வார இறுதியில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜி7 நாடுகள் கூட்டத்திலும், நோட்டோ உச்சி மாநாட்டிலும் போரிஸ் ஜான்சன் பங்கேற்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *