பிரிட்டனில் இருந்து வந்தால்… கட்டாயம் குவாரண்டைன்… மத்திய அரசு உத்தரவு…!!!

பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்தால் கட்டாயம் சுய தனிமைப்படுத்தப்  படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது. அங்கிருந்து இந்தியாவிற்குள் புதிய வைரஸ் வந்ததை தொடர்ந்து, விமான நிலையங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் தங்களை சுய தனிமைப் படுத்திக் கொள்வது அவசியம் என்றும், கொரோனா நெகட்டிவ் என்று வந்தாலும் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா உறுதியானவர்கள் மாதிரிகள் புனேவிற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.