பிரான்ஸில் திவீரமடையும் கொரோனா.. கடந்த 24 மணிநேரத்தில் 50,000 பேர் பாதிப்பு..!!

பிரான்சில் நேற்று ஒரே நாளில் மட்டும்  சுமார் 50,000 க்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்து, அதில் 308 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சில் கொரோனா வெகு தீவிரமடைந்து நாட்டையே உலுக்கி வருகிறது. இதன் படி கடந்த ஒரே நாளில் மட்டும் சுமார் 50,659 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,00,000 க்கும்  அதிகமாகியுள்ளது.

மேலும் இதில் 69,000 நபர்கள் மருத்துவமனையிலும், 26,044 நபர்கள் முதியோர் இல்லங்களிலும்  கொரோனா பாதித்து பலியாகியுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் மருத்துவமனைகளில் சுமார் 2035 நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் தீவிர சிகிச்சை பிரிவில் 480 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சுமார் 5109 நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.