இன்று நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துள்ளார். நாகர்ஜுனா 2.5 கோடி ரூபாய் செலவில் சொகுசு காரை திருமண பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் 300 நெருங்கிய நண்பர்களும் சினிமா பிரபலங்களும் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமண புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.