தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் தான் கவுண்டமணி. இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். இதனை அடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது கவுண்டமணி தனது 84 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நேற்று வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் கவுண்டமணி சொத்து மதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. அதில் அவருக்கு ரூபாய் 40 முதல் 50 கோடி ரூபாய் வரையில் சொத்து இருக்கும் என சொல்லப்படுகிறது.