பிரபாஸின் அடுத்த பிரம்மாண்ட படம்… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!!!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஓம் ராவத் இயக்கி வரும் ஆதிபுருஷ் திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலி கான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

ஆதிபூருஷ் ரிலீஸ் தேதி

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்திற்கு சச்சேத் பரம்பரா இசையமைத்துள்ளார் . இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படம் வருகிற 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *