இலங்கையில் தற்போதைய சூழல் ஏதுவாக இருப்பதால் பிரபாகரன் உயிருடன் இருப்பதை கூறுகிறேன் என்று பழ.நெடுமாறன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது . பிரபாகரன் எங்கே இருக்கிறார்? எப்போது வருவார்? என அறிய உலக தமிழர்கள் ஆவலாக இருக்கின்றனர். ஆனால், சூழ்நிலை கருதி தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்பதை வெளிப்படையாக கூறமுடியாது. ஆனால், உரிய நேரத்தில் வெளியே வருவார் என்று கூறினார்.

இந்நிலையில் இந்த செய்திக்கு இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் ரவி ஹேரத் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் கூறுகையில், பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை. மே.18. 2009ல் அவர் இறந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்றுள்ளார். இந்த விவகாரம் ட்விட்டரிலும் ட்ரெண்டாகி உள்ளது.