இலங்கையில் தற்போதைய சூழல் ஏதுவாக இருப்பதால் பிரபாகரன் உயிருடன் இருப்பதை கூறுகிறேன் என்று பழ.நெடுமாறன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது . பிரபாகரன் எங்கே இருக்கிறார்? எப்போது வருவார்? என அறிய உலக தமிழர்கள் ஆவலாக இருக்கின்றனர். ஆனால், சூழ்நிலை கருதி தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்பதை வெளிப்படையாக கூறமுடியாது. ஆனால், உரிய நேரத்தில் வெளியே வருவார் என்று கூறினார். இதற்கு இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பழ.நெடுமாறன் கூறியது “உண்மைதான்” என திருச்சி வேலுச்சாமி பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். ஆம்! ஜெர்மன் சென்றிருந்தபோது, பிரபாகரனுடன் சேர்ந்து தப்பித்த ஒருவரை நான் சந்தித்தேன்; அப்போது தலைவர் உயிருடன் இருக்கிறாரா? என நான் கேட்டதற்கு, சிரித்தபடியே ஆம்! தலைவர் உயிருடன் தான் இருக்கிறார் எனக் கூறினார். அவர் தற்போது ஆஸி.,வில் இருக்கிறார் என தெரிவித்தார்.