நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என்று இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் அதை விடுங்க என்று கூறி பதில் சொல்லாமல் தவிர்த்து விட்டார். முன்னதாக இளைஞர்களை சீமான் தவறான பாதையில் வழி நடத்துவதால் தற்போது இந்த உண்மையை தான் சொன்னதாக சங்ககிரி ராஜ்குமார் சொன்ன நிலையில் அது நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.

தொலைக்காட்சிகளில் எடிட்டராக பணிபுரிந்த போது சீமான் பிரபாகரனுடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை தான எடிட் செய்து கொடுத்ததாகவும் அப்போதே அது எடிட் செய்த போட்டோ என்று பரவிய நிலையில் நான் யாரிடமும் அதை பற்றி கூறவில்லை என்றும் சங்ககிரி ராஜ்குமார் கூறினார். ஆனால் இந்த கேள்விக்கு இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பதில் சொல்ல மறுத்துவிட்டார். மேலும் இதன் காரணமாக தற்போது இந்த விஷயம் பேசும் பொருளாக மாறி உள்ளது.