டெல்லியில் உள்ள திகார் ஜெயிலின் கீழ் மண்டோலி சிறை உள்ளது. இங்கு தீபக் ஷர்மா என்பவர் உதவி கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவ நாளில் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது அவர் சிலருடன் சேர்ந்து நடனம் ஆடினார். அதாவது சஞ்சய் தத் நடித்த கல் நாயக் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு நடனம் ஆடினர்.

அப்போது அவர் கையில் கைதுப்பாக்கி வைத்திருந்தார். அவர் அதை வைத்து வானை நோக்கி சுட்டவாறு நடனம் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் இதனால் தற்போது தீபக்கை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.