“பிரபல ரவுடியுடன் இருக்கும் காயத்ரி ரகுராம்”…. புகைப்படம் வெளியிட்டு வெளுத்து வாங்கிய திருச்சி சூர்யா…. நடந்தது என்ன….?

பாஜக கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் விலகியதிலிருந்து தொடர்\ந்து அண்ணாமலைக்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். அதன் பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயசேட்சையாக நிற்கிறேன். அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து அவரும் தனித்து போட்டியிடட்டும் என்று தொடர்ந்து காயத்ரி ரகுராம் சவால் விட்டு வருகிறார். அதன் பிறகு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வரும் காயத்ரி ரகுராம் ஏப்ரல் 14-ஆம் தேதி பெண்களுக்காக நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தினமும் ட்விட்டர் பதிவை போட்டு அண்ணாமலையை வறுத்தெடுக்கும் காயத்ரி ரகுராமுக்கு திருச்சி சூர்யா சிவா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது திருச்சி சூர்யா சிவா பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்துடன் காயத்ரி  இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் காயத்ரி ரகுராம் பற்றி திருச்சி சூர்யா சிவா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply