பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி மூதாட்டி பலி…. பெரும் பரபரப்பு…!!!

பிரபல யூடியூபர் இர்ஃபானின் சொகுசு கார் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இர்ஃபான் வியூஸ் என்ற பெயரில் 36 லட்சம் பின் தொடர்பாளர்களை அவர் வைத்திருக்கிறார்.இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் பிரபல யூடியூபர் இர்ஃபானின் சொகுசு கார் ஒரு பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோர விபத்தில் பத்மாவதி (55) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான விசாரணையில், இர்ஃபானின் கார் ஓட்டுநர் அசாருதின் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply