பிரபல மலையாள இயக்குனர் ஷாநவாஸ் மரணமடைந்தார்… ரசிகர்கள் இரங்கல்…!!!

பிரபல மலையாள இயக்குனர் ஷாநவாஸ் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத் திரையுலகில் இயக்குனர் ஷாநவாஸ் ‘கரி’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் நல்ல விமர்சனங்களை பெற்றவர். சமீபத்தில் நடிகர் ஜெய சூர்யாவை வைத்து ‘சூபியும் சுஜாதாவும்’ படத்தை இயக்கியிருந்தார். நடிகை அதிதி ராவ் கதாநாயகியாக நடித்திருந்த இந்தப் படம் கொரோனா பரவல் காரணமாக ஓடிடி தளத்தில் வெளியானது.

மலையாள சினிமா பட இயக்குனர் ஷாநவாஸ் மூளைச்சாவு அடைந்தார் || tamil cinema  director Naranipuzha Shanavas passes away

இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான வேலையில் ஈடுபட்டிருந்த இயக்குனர் ஷானவாஸ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்திருந்தனர். தற்போது அவர் இயற்கை எய்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவிற்கு திரை பிரபலங்களும் ,ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.