தமிழ் சினிமாவில் கல்யாண சமையல் சாதம், உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், அரிமா நம்பி போன்ற சில படங்களில் நடித்து புகழ்பெற்றவர் லேகா வாஷிங்டன். இவர் நடிகர் சிம்புவின் கெட்டவன் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமான நிலையில் ஒரு சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்ட நிலையில் அந்த படப்பிடிப்பில் நடந்த கசப்பான அனுபவங்கள் தான் சினிமாவில் இருந்து விலகுவதற்கு காரணம் என லேகா வாஷிங்டன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த பல்லோ கட்டர்ஜி என்ற பத்திரிகையாளரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

இந்நிலையில் நடிகை லேகா பாலிவுட் நடிகர் இம்ரான் கானுடன் கைகோர்த்து ஊர் சுற்றும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்த இம்ரான் கான் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இவர் அவந்திகா மாலிக்கா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து செய்து அவரை பிரிந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். மேலும் தற்போது இம்ரான் கான் மற்றும் லேகா இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அவர்கள் காதலிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இருவர் தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)