பிரபல நாட்டில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கடத்தல்… தீவிர மீட்பு பணியில் போலீசார்..!!!!!

அமெரிக்காவில் நான்கு இந்தியர்களை கடத்தியவர்களை தீவிரமாக மீட்க முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜஸ்தீப் சிங் (36) ஜஸ்லின் கவுர் (27) தம்பதியினர், இவர்களின் எட்டு மாத குழந்தை அரூஹி தெரி மற்றும் அமன்தீப் சிங்(39)  போன்றோர் கடத்தி செல்லப்பட்டிருக்கின்றார்கள். அதாவது நெடுஞ்சாலையில் அவர்கள் பணி புரியும் இடத்திற்கு அருகே அவர்களை கடத்தல்காரர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றிருக்கின்றார்கள். மேலும் அவர்களிடம் ஆயுதம் இருந்ததாகவும் ஆபத்தானவர்கள் என கூறிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால் மேற்கொண்ட தகவல் தெரிவிக்க மறுத்துள்ளனர்.