பிரபல நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… வீதிகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்…!!!!

சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் ரிக்டர்  அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தின் போது  கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியது. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  சின்ஜியாங்கில் உள்ள விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருந்த பயணிகள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் பயந்து அங்கிருந்து வெளியேறும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இருப்பினும் இதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது பொருட்சேதம்  குறித்த தகவல்கள் இல்லை.