பிரபல நாட்டில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்…. 2 பேர் காயம்…. கண்டனும் தெரிவித்த அரசு…!!!

சிரியா நாட்டில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் கடந்த பல ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம், போதிய மருத்துவ வசதி, உணவு பற்றாக்குறையம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் பிரிவினையை தூண்டும் செயல்களை மட்டுமே அரசு மொத்த கவனமும் வைத்திருந்தது. இதனால் கிளர்ச்சியாளர்கள் பெருகினர். அவர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றன. கிளர்ச்சியாளர்களை அழிக்கும் வேலையில் அசாத் அரசு இறங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அரசுக்கு உதவியாக ரஷ்ய உள்ளிட்ட வல்லரசுகள் களமிறங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து சிரியாவில் 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை 5 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல லட்சக்கணக்கான அதிகளவில் வெளியேறி அண்டை நாடுகளை தஞ்சம் அடைந்துள்ளன. இந்நிலையில் உள்நாட்டு போரால் அதிகம் பாதிக்கப்பட்ட சிரியாவில் இஸ்ரேலிய படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதில், அந்நாட்டில் வடமேற்கு டார்டவுஸ் மாகாணத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் சிரியாவில் உள்ள பொதுமக்கள் 2 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் அரசு மத்திய தரைகடல் பகுதியில் மேற்கே லெபனானின் திரிபோலி நகரில் இருந்து டார்டவுஸ் நகரின் தெற்கே ஹமிதியா நகர் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதனையடுத்து சிரியாவின் கடலோர கிராம பதிலை நடந்துள்ள இந்த தாக்குதலை பற்றி சிரியா ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது. இதில் பொருள் இழப்புகளுக்கு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் அனைத்து ஈரானுடன் தொடர்புடைய இலக்குகள் ஆகும் என்று இஸ்ரேல் எப்போதும் கூறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது. இருப்பினும் சிரியாவில் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் செயல்படுகிறது என்றும் தாக்குதலுக்கு சிரியா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *