பிரபல நாட்டின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பதவிக்கு இந்திய பெண்?….. லீக்கான தகவல்….!!!!

அமெரிக்காவின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆர்த்தி பிரபாகரின் பெயரை அதிபர் ஜோபைடன் பரிந்துரைத்து இருக்கிறார்.

அமெரிக்க நாட்டில் அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, விண்வெளிஆய்வு, பருவநிலை மாற்றம் உட்பட பல விவகாரங்களில் அதிபருக்கு கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க ஆலோசனை வழங்குவது முதன்மை அறிவியல் ஆலோசகரின் பணி ஆகும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பிலிருந்த எரிக்லாண்டர் தன் சக ஊழியரை துன்புறுத்தியதாக எழுந்த புகாரின்படி கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து சென்ற 4 மாதங்களுக்கும் மேலாக இந்த பதவி காலியாகயிருந்த சூழ்நிலையில், அதிபரின் அடுத்த அறிவியல் ஆலோசகரை தேர்வு செய்யும் பணியில் வெள்ளை மாளிகை தீவிரமாக ஈடுபட்டது. அதன்படி அதிபர் ஜோபைடனின் அறிவியல் ஆலோசகர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆர்த்தி பிரபாகரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை செனட்சபை ஏற்று கொள்ளும் பட்சத்தில், இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் வெளிநாட்டு பெண் கருப்பினத்தவர் எனும் பெருமையை ஆர்த்தி பிரபாகர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஆர்த்தி பிரபாகர் கடந்த 1959ஆம் வருடம் டெல்லியில் பிறந்தார். பின் இவர் டெக்சாஸ் நகரத்தில் பள்ளிக் கல்வியை முடித்தார். அதனை தொடர்ந்து கலிபோர்னியா இன்ஸ்டிடியூட்ஆப் டெக்னாலஜியில் கடந்த 1984ம் ஆண்டில் ஆர்த்தி முனைவர் பட்டம் பெற்றார். சென்ற 1993 ஆம் வருடம் பில்கிளிண்டன் அதிபராக இருந்தபோது, தேசிய தர மற்றும் தொழில்நுட்ப மையத்தின் தலைவராக இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *