தமிழ் சினிமாவில் ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். இவர் பிறமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரம்யா பாண்டியன் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவர் கடந்த சில வருடங்களாக யோகா பயிற்சியாளர் ஆன லோவெல் தவான் என்பவரை காதலித்து வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் ரிஷிகேஷில் உள்ள சிவபுரி கங்கை நதி கரையில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது நடிகர் ரம்யா பாண்டியனுக்கு திருமணம் நடந்துள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வரும் நிலையில் அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் வருகிற 15 ஆம் தேதி நடிகர் ரம்யா பாண்டியனுக்கு சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.